Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏழு பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு பொருளாதார தடை! – அமெரிக்கா அதிரடி

In
Updated: 05:27 GMT, Mar 27, 2018 | Published: 04:12 GMT, Mar 27, 2018 |
0 Comments
1151
This post was written by : Anojkiyan

அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும், பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

குறித்த 7 நிறுவனங்களும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை நலன்களுக்கு முரணாக நடந்துகொண்டமை, அமெரிக்க அரசால் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு, வர்த்தக அமைப்பு விளக்கமளித்துள்ளது.

அத்தோடு, தீவிரவாத ஒழிப்புக்காக ஆதரவுக் கரம் நீட்டும் ஒரு கட்டமாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வந்த 2 பில்லியன் டொலர்கள் நிதியுதவியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நிதி நிழலிலும், ஆயுத அரவணைப்பிலும் சொகுசாக வாழ்ந்து வந்த பாகிஸ்தானுக்கு குறித்த தடையுத்தரவு பேரிடியாக விழுந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg