Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் கைதிக்கு கருணை காட்டுங்கள்: திருமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

In இலங்கை
Updated: 05:45 GMT, Mar 28, 2018 | Published: 05:45 GMT, Mar 28, 2018 |
0 Comments
1183
This post was written by : Varshini

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை கருணையின் அடிப்படையில் விடுவிக்குமாறு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மூன்று தசாப்த காலத்தில் பெறுமதிமிக்க உயிர்களை வகை தொகையின்றி இந்நாட்டு மக்கள் இன மத வேறுபாடற்று இழந்திருக்கின்றனர். இழப்புகளைச் சந்தித்தவர்கள் அவற்றை ஈடுசெய்ய முடியாமல் இன்றும் கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றனர் என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை கருணையின் அடிப்படையில் விடுவிக்க வேண்டுமெனவும், ஏனையோர் தொடர்பிலும் விரைந்த தீர்மானம் எடுக்கவேண்டுமெனவும் மக்கள் வலியுறுத்தினர்.

‘கேடயம்’ எனும் அரசியல் உரிமைகளுக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பொது மக்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg