பேருந்து மீதான தாக்குதல்! – பகிரங்க மன்னிப்பு கோரியது லிவர்பூல்
சம்பியன் லீக் கால்பந்து தொடரின் கால் இறுதிச் சுற்றுப் போட்டிக்காக இங்கிலாந்து – லிவர்பூலிற்கு வருகை தந்த மென்செஸ்டர் அணியினரின் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் லிவர்பூல் கழகம் மன்னிப்பு கோரியுள்ளது.
நேற்று (புதன்கிழமை) குறித்த போட்டிக்காக மென்செஸ்டர் அணி மைதானத்தை நோக்கி வந்தது. இதன்போது இரு அணி ரசிகர்களும் பாதையின் இரு மருங்கிலும் நின்று தத்தமது அணிக்கு வரவேற்பினை வழங்கியிருந்தனர்.
இதன்போது லிவர்பூல் அணி ரசிகர்கள், மென்செஸ்டர் அணியின் பேருந்து மீது போத்தல்கள் மூலம் தாக்குதலை மேற்கொண்டதால் குறித்த பகுதியில் அமைதியற்ற சூழல் தோன்றியது.
இந்த சம்பவம் தொடர்பில் மென்செஸ்டர் அணியிடம், லிவர்பூல் மன்னிப்பினைக் கோரியுள்ளதோடு, இந்த முறைகேடான சம்பத்துடன் தொடர்பு பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களை அடையாளப்படுத்தவும் லிவர்பூல் உதவிகளைச் செய்யும் எனவும், சம்பவத்திற்காக ழுமுப் பொறுப்பினை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் லிவர்பூல் கழகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.