Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் தென் கொரிய பெண் ஜனாதிபதிக்கு 24 ஆண்டுகள் சிறை!

In
Updated: 05:10 GMT, Apr 8, 2018 | Published: 05:10 GMT, Apr 8, 2018 |
0 Comments
1139
This post was written by : Ravivarman

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென் கொரிய முன்னாள் பெண் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பார்க் கியூன் ஹைக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி கிம் சே-யூன் நேற்று (சனிக்கிழமை) தீர்ப்பளித்ததுடன், 18 பில்லியன் (தென் கொரிய பணம்) அபராதமாக விதிக்கப்பட்டது.

எனினும் தீர்ப்பு வெளியான போது நீதிமன்றத்தில் பார்க் கியூன் ஆஜராகவில்லை என்பதுடன், தீர்ப்பு விவரம் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

தீர்ப்பு வெளியானதையடுத்து பார்க் கியூன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

தென் கொரியாவின் முதல் பெண் அதிபராக பார்க் கியூன் ஹை கடந்த 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அரசுக் கொள்கைகளை தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

பார்க் கியூன் ஹைக்கு உடந்தையாக அவருடைய நெருங்கிய தோழி சோய் சூன் சில் என்பவர் செயற்பட்டு வந்ததுடன், சோய் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டது.

அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த பெப்ரவரி மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg