Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பேசவேண்டிய அவசியமில்லை: இரா.சம்பந்தன்

In இலங்கை
Updated: 06:07 GMT, Apr 10, 2018 | Published: 03:55 GMT, Apr 10, 2018 |
0 Comments
1342
This post was written by : Ravivarman

அடுத்த வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தற்போது தீர்மானிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘வட மாகாண சபைக்கான அடுத்த தேர்தலின் போது முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து தற்போது முடிவெடுப்பது அவசியமில்லை. மாகாணசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு மிக நீண்ட காலம் இருப்பதுடன் திகதி கூடத் தீர்மானிக்கப்படவில்லை. அதனால் இந்த விடயம் குறித்து இப்போது தீர்மானிக்க முடியாது.

எனவே இது குறித்து அவசரப்பட்டு எந்தக் கருத்தினையும் நான் பதிவு செய்ய விரும்பவில்லை. அதற்கான நேரம் வரும்போது நானும் கூட்டமைப்பும் கலந்து முடிவெடுப்போம். மாகாணசபைத் தேர்தலில் நாம் போட்டியிடுவது நிச்சயம் என்பதால் அதற்கான தகுதியுடைய வேட்பாளரை நிறுத்தவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. அதனால் காலம் வரும்போது நாம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

அத்துடன், நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் அரசாங்கம் விரைந்து தீர்வு காணவேண்டும் அதற்கான பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது. ஆனால் புதிய அரசியலமைப்பு விடயத்தில் சில தாமதநிலை காணப்பட்டாலும் அது நிறைவேற்றப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

எனவே இதற்கான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன், அதற்கான முயற்சிகளை நாம் விரைவுபடுத்துவோம்’ என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)