Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாழ்விடங்களை நாடுவோருக்கு பொருத்தமான தீர்வு

In வணிகம்
Updated: 11:39 GMT, Apr 11, 2018 | Published: 11:38 GMT, Apr 11, 2018 |
0 Comments
1032
This post was written by : Risha

நவீன இல்லங்களுக்கான புத்தாக்கமான எண்ணக்கருக்கள் மற்றும் எண்ணங்களுடன் இலங்கையில் புதிய ஆதன நிர்மாணிப்பாளராக உருவெடுத்துள்ள Landmark Developers, முன்கூட்டியே பொறியமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிலைபேற்றியல் கொண்ட நிர்மாணத்தின் கூட்டிணைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட முதன்முதலான ஒரு தீர்வாக மாறியுள்ள “Nano Homes” என்ற செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

தமக்கென முதன்முதலாக வீடொன்றை வாங்குவதற்கு எதிர்பார்த்துள்ள தற்காலத்து இளம் தலைமுறையினர் அல்லது சிரமங்களைக் குறைத்து, தமது ஓய்வுகாலத்தில் குறைந்தளவு செலவில் வீட்டைப் பேணிப் பராமரிக்க விரும்புகின்ற வயோதிபர்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக அடக்கமான வீடமைப்புத் தீர்வுகளாக “Nano Homes” அமைந்துள்ளன.

சாதாரண “Nano Homes” இல்லமொன்று இரண்டு அல்லது மூன்று மாடி வீடாக, 1500 சதுர அடி முதல் மொத்த இட அளவைக் கொண்டிருக்கும். 2 வாகன தரிப்பிடங்கள், 2 அல்லது 3 படுக்கை அறைகள், 2 குளியறைகள், சரக்கறை, சமையல் அறை, சாப்பாட்டு அறை மற்றும் வரவேற்பறை ஆகியவற்றை அது கொண்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட நிலப் பரப்பினை உச்ச அளவில் பயன்படுத்தி, அடக்கமான அழகுடன் நிர்மாணிக்கப்படுவது “Nano Homes” இன் மிகவும் கவர்ச்சியான அம்சங்களுள் ஒன்றாகும்.

வாடிக்கையாளர் தனது தேவைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் வடிவமைத்து, நிர்மாணிக்கின்ற சுதந்திரம் மற்றும் நெகிழ்வுப்போக்குக்கு மேலாக, அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை ஒவ்வொரு இல்லமும் கொண்டுள்ளது. அறைகள் மற்றும் குளியலறைகளின் எண்ணிக்கை, தரையின் வகை போன்ற இல்லத்தின் முக்கியமான அம்சங்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பினை இது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், ஏனைய “Nano Homes” உடன் ஒப்பிடுகையில், வேறுபட்ட, தனித்துவமான வாழ்விடத்தை நிர்மாணித்துக் கொள்வதற்கான புத்தாக்கமான அம்சங்களையும் சேர்த்துக்கொள்ள வழிகோலுகின்றது.

வடிவமைப்புத் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், புகழ்பெற்ற வர்த்தகப்பெண்மணி ஒருவரின் தலைமைத்துவத்தின் கீழ், இளமையான, அர்ப்பணிப்பு மிக்க மற்றும் உற்சாகமான அணியால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற Landmark Developers புத்தாக்கமான அசைவற்ற ஆதன இருப்புத் தீர்வுகள் அனைத்தையும் ஒரே இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வகையில் தனது சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)