இலங்கை வர்த்தகக் குழு லண்டன் விஜயம்!
This post was written by : Litharsan

பொதுநலவாய வர்த்தக அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து வர்த்தகக் குழுவொன்று லண்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் 50 பேர் கொண்ட குழுவே அடுத்த வாரம் பயணிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனைவிட இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக பெரும்பாலான வர்த்தகர்களும் இலங்கையிலிருந்து செல்லவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைப்புக் கூட்டம் முதன் முறையாக லண்டனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.