Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நவாஸ் ஷெரீப்பிற்கு அரசியலில் ஈடுபட வாழ்நாள் தடை!

In
Updated: 10:31 GMT, Apr 13, 2018 | Published: 10:31 GMT, Apr 13, 2018 |
0 Comments
1158
This post was written by : Ravivarman

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு அரசியலில் ஈடுபட வாழ்நாள் தடை விதித்து பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை பனாமா லீக்ஸ் விவகாரத்தில் குற்றவாளி என கடந்த வருடம் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அறித்தது. இதனை அடுத்து, கடந்த வருடம் ஜூலை மாதம் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறும் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த அவர் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்தார். இதனை விசாரித்த பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடையை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

67 வயதான நவாஸ் ஷெரீப் முஸ்லிம் லீக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக இதுவரை மூன்று தடவைகள் பதவி வகித்துள்ளதுடன், அந்த மூன்று வருடங்களிலும் பண மோசடிகள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)