Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கத்துவா சிறுமியின் வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைப்பு!

In இந்தியா
Updated: 13:50 GMT, Apr 14, 2018 | Published: 13:50 GMT, Apr 14, 2018 |
0 Comments
1195
This post was written by : Ravivarman

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்குமாறு அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பில், மூன்று பொலிஸார் உட்பட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் கைதாகியுள்ள மூன்று பொலிஸாரும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்வது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், தனிப்பட்ட முறையில் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தால் இவ்வழக்கு 90 நாட்களுக்குள் முடிந்து தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை காஷ்மீர் மாநிலத்தில் எட்டு வயது சிறுமியை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளிகளை, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடக்கூடாது என, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)