Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மகாசங்கத்தினரிடம் ஆசிபெற்றார்!

In இலங்கை
Updated: 14:43 GMT, Apr 15, 2018 | Published: 15:00 GMT, Apr 15, 2018 |
0 Comments
1113
This post was written by : Ravivarman

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில விகாரைகளுக்கு சென்று மகா சங்கத்தினரை சந்தித்து பிறந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

முதலில் பம்பலபிட்டிய ஸ்ரீ வஜிராராமயவுக்கு நேற்று (14) பிற்பகல் சென்ற ஜனாதிபதி சமயக் கிரியைகளில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து விகாராதிபதி சங்கைக்குரிய திருக்ணாமலயே ஆனந்த நாயக தேரரை சந்தித்து சுகதுக்கங்களை கேட்டறிந்ததைத் தொடர்ந்து மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிறந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசீர்வாதங்களை வழங்கினர்.

அதன் பின்னர் பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரைக்கு சென்று சியம் மகா நிகாயவின் கோட்டே பிரிவின் மகாநாயக தேரர் கலாநிதி சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், தேரரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.

இதன்போது தேரர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு பிறந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு ஆசீர்வாதங்களை வழங்கினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)