Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோனியின் போராட்டம் வீண்: பஞ்சாப் அணி திரில் வெற்றி

In கிாிக்கட்
Updated: 04:09 GMT, Apr 16, 2018 | Published: 04:09 GMT, Apr 16, 2018 |
0 Comments
1165
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், பஞ்சாப் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மொஹலியில் நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக கிறிஸ் கெய்ல் 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் தாகூர், தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து, 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சென்னை அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்கள் மட்டுமே பெறமுடிந்தது. இதனால் சென்னை அணி 4 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் சென்னை அணி சார்பில் டோனி ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஹென்ரிவ் டை 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பஞ்சாப் அணி சார்பில் அதிரடியாக 63 ஓட்டங்களை குவித்த கிறிஸ் கெய்ல், போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)