Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாநகர சபையை கட்டியெழுப்புவோம்: முதலாவது அமர்வில் சரவணபவன்

In இலங்கை
Updated: 06:25 GMT, Apr 16, 2018 | Published: 06:25 GMT, Apr 16, 2018 |
0 Comments
1148
This post was written by : Varatharajan Yuganthini

இன, மத மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பால் மட்டக்களப்பு மாநகரசபையினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது அமர்வு மேயர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுப்பது தொடர்பில் கல்வி, சுகாதாரம், காணி, விளையாட்டு, கலை, கலாசாரம், அபிவிருத்தி உட்பட எட்டு மாநகர கட்டளை நியதிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. தலா ஆறு உறுப்பினர்களைக் கொண்டதாக அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாநகரசபைக்காக உருவாக்கப்பட்டுள்ள பாதீடுகள் சபையில் முன்வைக்கப்பட்டது.

குறித்த பாதீடுகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டன. பின்னர் பாதீட்டில் ஏதாவது இணைப்பதாக இருந்தால் குறை நிரப்பு பிரேரணை மூலம் சபையின் ஏகோபித்த தீர்மானங்கள் மூலம் சேர்க்கமுடியும் என தலைவர் குறிப்பிட்டார். அத்தோடு, பாதீட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் சபையின் அனுமதியுடன் எதிர்காலத்தில் அதனை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். அதன் பின்னர் சபை நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன.

மட்டக்களப்பு மாநகரசபையின் இன்றைய அமர்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் மற்றும் மாநகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட 38 உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)