Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியா மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது –சீனா

In
Updated: 10:23 GMT, Apr 16, 2018 | Published: 10:23 GMT, Apr 16, 2018 |
0 Comments
1260
This post was written by : Suganthini

சிரியாவில் அமெரிக்கா தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதலானது, சர்வதேச சட்ட விதிமுறையின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக, சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சு இதனைக் கூறியுள்ளது.

அத்துடன், சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதல் தொடர்பாக நியாயமான விசாரணையை நடத்தவும் சீன வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

கிழக்கு கௌட்டாவில் போராளிக்குழுவினருக்கும் சிரிய அரசாங்கப் படையினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், டவுமா நகரிலுள்ள அப்பாவி மக்கள் மீது சிரியப் படையினர் ரசாயனத் தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சிரிய அரசாங்கத்துக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல் கடந்த வாரம் அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதுடன், இதற்கு பிரான்ஸும் பிரித்தானியாவும் ஆதரவு வழங்கியுள்ளன. இந்நிலையிலேயே, சீனா வெளிவிவகார அமைச்சு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg