Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலத்திரனியல் உலகில் கல்வியை எதிர்கொள்வது பெரிய சவாலாகும்: சிவஞானம் சிறீதரன்

In இலங்கை
Updated: 15:36 GMT, Apr 16, 2018 | Published: 15:36 GMT, Apr 16, 2018 |
0 Comments
1054
This post was written by : poovannan

இன்றைய நவீன இலத்திரனியல் உலகத்தில் கல்வியை எதிர்கொள்ளல் என்பது மிகப்பெரிய சவாலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் புலோலி அபிவிருத்தி நிதியத்தின் “கல்விக்கு கைகொடுப்போம்” வருடாந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இன்று (திங்கட்கிழமை) அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “நவீன உலகத்தின் சவால்களை எதிர்கொண்டு தங்களை ஒழுக்க நெறியின் பால் கல்வி ரீதியாக வளர்த்துச்செல்ல துணிய வேண்டும். இன்றைய நவீன இலத்திரனியல் உலகத்தில் கல்வியை எதிர்கொள்ளல் என்பது மிகப்பெரிய சவாலாகும்.

தொலைக்காட்சிகளின் நவீனத்துவ வரவுகள், கணனிகளினூடான ஈர்ப்பு, இணையத்தளங்கள் ஊடான ஆர்வம் மற்றும் முகநூல்களுக்கூடான மாணவர்களின் செயற்பாடு என்பன பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தை செலுத்துகின்றது.

கையடக்கத் தொலைபேசிகள் என்பதும் கணனிகள் என்பதும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளிலும் வாசிப்புத்திறனிலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகின்றது. இந்த சூழலில் ஏழை மாணவர்களின் நலன் கருதி புலோலி அபிவிருத்தி நிதியத்தின் முயற்சியை பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சுரேஸ்குமார், புலோலி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வைத்தியகலாநிதி முல்லை பரமேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம், புலோலி அபிவிருத்தி இணையத்தின் இணைப்பாளர் தம்பையா சிவகுருநாதன், வடமராட்சி பிரதேச சபையின் தவிசாளர் த.ஐங்கரன், பண்டிதர் பரந்தாமன், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)