Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். தொடர்: டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!

In கிாிக்கட்
Updated: 03:51 GMT, Apr 17, 2018 | Published: 03:51 GMT, Apr 17, 2018 |
0 Comments
1078
This post was written by : Varshini

ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், கொல்கத்தா அணி 71 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 13வது போட்டி நேற்று (திங்கட்கிழமை) கொல்கத்தாவில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து, 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் நிட்டிஸ் ரானா 59 ஓட்டங்களையும், மீண்டும் ஒருமுறை அதிரடி காட்டிய ரசல்ஸ் 12 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 41 ஓட்டங்களையும், ரொபின் உத்தப்பா 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் ராகுல் தெவிட்யா (Rahul Tewatia) 3 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் மொரிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 201 என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 14.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 129 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 71 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் மெஸ்வெல் 47 ஓட்டங்களையும், ரிஷாப் பன்ட் 43 ஓட்டங்களையும், பெற்றுக்கொடுக்க ஏனையோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில், சுனில் நரைய்ன் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)