Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டுடன் மார்க்கம் சார்ந்த விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்: ஷிப்லி பாறூக்

In இலங்கை
Updated: 05:27 GMT, Apr 17, 2018 | Published: 05:27 GMT, Apr 17, 2018 |
0 Comments
1056
This post was written by : poovannan

வளர்ந்து வருகின்ற எம்இளைஞர் சமூகம் விளையாட்டுத் துறையோடு மாத்திரமன்றி, கல்வி மற்றும் மார்க்கம் சார்ந்த இரு விடயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியதொரு தேவைப்பாடு இருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகமொன்றிற்கு நேற்று (திங்கட்கிழமை) தனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “விளையாட்டுக் கழகங்கள் தங்களை விளையாட்டுத் துறையோடு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் நம்சமூகம் சார்ந்த ஏனைய விடயங்களிலும் இளைஞர்களை அதிகம் வளப்படுத்த வேண்டியதொரு தேவைப்பாடு இருக்கின்றது.

நம் மாவட்டத்தின் அரச புள்ளிவிபரங்களைப் பார்க்கின்றபோது எமது மாவட்டத்திலுள்ள மூன்று முஸ்லிம் பிரதேசங்களில் கூடுதலான சமுகவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை தெரிகின்றது. அதனால் சமூகத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களுக்கு எவ்வாறான பங்களிப்புக்களை செய்ய முடியும் என்பதனையும் ஆராய்ந்து அச்செயற்பாடுகளை செயற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடகச் செயலாளரும் கல்குடாத்தொகுதி இணைப்பாளருமான எம்.ரீ.ஹைதர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் திபாஸ் மற்றும் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)