Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அளவெட்டியில் கொள்ளையர்கள் கைவரிசை!

In இலங்கை
Updated: 05:54 GMT, Apr 17, 2018 | Published: 05:54 GMT, Apr 17, 2018 |
0 Comments
1085
This post was written by : poovannan

யாழ். அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 15 பவுண் நகையை கொள்ளையடித்ததுடன் தப்பிச்சென்றுள்ளனர்.

அளவெட்டி – மகாத்மா வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (திங்கட்கிழமை) குளியலறையின் யன்னல் ஊடாக மூன்று கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளனர்.

தலைக்கவசம் அணிந்த மூவரும் முகத்தை மறைத்தவண்ணம் வீட்டினுள் புகுந்து வீட்டிலிருந்தவர்களை மிரட்டியதுடன், வீட்டின் அறைகளில் தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போது வீட்டில் இருந்த தாலிக்கொடி, சங்கிலி மற்றும் மோதிரம் என 15 பவுண் பெறுமதியுடைய நகைகளை கொள்ளையடித்ததுடன் தப்பிச்சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பிச்செல்லும் போது மிளகாய் தூளினை வீடு முழுவதும் விசிறிவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)