Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாநகரசபை உறுப்பினர்களால் அன்னை பூபதியின் நினைவிடத்தில் சிரமதான நிகழ்வு

In இலங்கை
Updated: 06:59 GMT, Apr 17, 2018 | Published: 06:59 GMT, Apr 17, 2018 |
0 Comments
1073
This post was written by : poovannan

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களால் கல்லடியில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிரமதான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது அமர்வின்போது விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில், கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து மாநகரசபை உறுப்பினர்களும் இச்சிரமதான நிகழ்வை முன்னெடுத்தனர்.

இச்சிரமதானம் தொடர்பாக பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன் கூறுகையில், “தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து தியாக தீபம் அன்னை பூபதி உயிர்நீத்தார். தாயக விடுதலைக்காக ஒப்பற்ற தியாகம் செய்த அன்னை பூபதியின் நிகழ்வுகளை, வெறும் அரசியல் நோக்கம் கருதாது, நிகழ்வுக்கான முன்னாயத்த வேலைகளைச் செய்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

அன்னை பூபதியின் நினைவு தினத்தை, அவரது குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் நடத்தக்கூடாது என மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இச்சிரமதான நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மாநகரசபை ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)