Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேலாண்மை வாரியம் அமைக்ககோரி விவசாயிகள் நூதனமுறையில் போராட்டம்

In இந்தியா
Updated: 09:08 GMT, Apr 17, 2018 | Published: 09:08 GMT, Apr 17, 2018 |
0 Comments
1120
This post was written by : Kemasiya

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் நூதன முறையில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது காவிரி நீர் வேண்டுமெனக் கூறியவாறு, அய்யாக்கண்ணு உட்பட பல விவசாயிகள் சுடுகாட்டில் சடலங்களை போல் படுத்திருந்து கோசம் எழுப்பியிருந்தனர்.

அத்துடன் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், உச்ச நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் முடிவடைந்தும் மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

எனவே நடவடிக்கை எடுக்கும் வரை எமது போராட்டம் தொடருமென, இப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் வலியுறுத்தியிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg