Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களுதாவளையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டு விழா

In இலங்கை
Updated: 10:15 GMT, Apr 17, 2018 | Published: 10:15 GMT, Apr 17, 2018 |
0 Comments
1024
This post was written by : poovannan

மட்டக்களப்பு – களுதாவளையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு உள்ளூர் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் விளையாட்டு விழா பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் பிரதம அதிதியாக கலந்துகொள்ள நேற்று (திங்கட்கிழமை) இவ்விளையாட்டு விழா நடைபெற்றது.

இவ்விளையாட்டு விழாவில் வழுக்குமரம் ஏறுதல், தலையணைச் சமர், கிடுகு பின்னுதல், கயிறு இழுத்தல், மரதன் ஓட்டம், முட்டைமாற்றுதல், உள்ளிட்ட பல கலாசார விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வெற்றிக் கேடையங்களும் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் குறித்த விளையாட்டுக்கழகதின் தலைவர் சோ.திருநாவுக்கரசு, உதவிக் காணி ஆணையாளர் கு.பிரணவன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கணக்காளர் ஆர்.கார்த்திகேசு, வைத்தியர் வி.இளங்கோ, கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)