Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவின் பதிலடிக்கு பிரித்தானியா தயாராக வேண்டும்: பொரிஸ்

In
Updated: 11:09 GMT, Apr 17, 2018 | Published: 11:09 GMT, Apr 17, 2018 |
0 Comments
1295
This post was written by : Risha

சாத்தியமான ரஷ்யாவின் பதில் தாக்குதல்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பிரித்தானியா முன்னெச்சரிக்கையாக செயற்படுதல் அவசியம் என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தலைமையில் பிரித்தானியா மற்றும் பிரான்சின் ஆதரவுடன் வார இறுதியில் சிரியா மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாகவே அவரது இக்கருத்து வெளியாகியுள்ளது.

சிரியாவின் டூமா நகரில் 60 பொதுமக்களின் உயிரை காவுகொண்ட சந்தேகத்திற்கிடமான இரசாயன ஆயுத தாக்குதலை தொடர்ந்து சிரியாவை அச்சுறுத்திவந்த அமெரிக்க உள்ளிட்ட கூட்டணி நாடுகள் கடந்த சனிக்கிழமை வான் வழித் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தது.

சிரியா மீதான மேற்குல நாடுகளின் தாக்குதல்களானது ஐ.நா. சாசனத்தை மீறியுள்ளதாகவும், அத்தகைய அச்சுறுத்தல்களின் விளைவுகளை மேற்குலக நாடுகள் தீவிரமாக சிந்தித்திருக்க வேண்டும் என்றும் மொஸ்கோ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)