Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விடுவிக்கப்படாத காணிகளால் மக்கள் விசனம்

In இலங்கை
Updated: 12:16 GMT, Apr 17, 2018 | Published: 12:14 GMT, Apr 17, 2018 |
0 Comments
1042
This post was written by : poovannan

யாழ். வலிகாமம் வடக்கில் மூன்று படைமுகாம்கள் அகற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பூரணமாக மீள்குடியேற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் இரண்டு வீதிகளை பூரணமாக பயன்படுத்த அனுமதிக்காமல் இராணுவம் தடை செய்திருப்பதாகவும் அங்கு மீள்குடியேறிவரும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

ஜே. 240, ஜே. 246, ஜே. 247 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக உள்ள 683 ஏக்கர் நிலம் மக்களிடம் மீள வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் மேற்படி கிராமசேவகர் பிரிவுகள் பூரணமாக விடுவிக்கப்படவில்லை.

எனவே மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட குறித்த கிராமசேவகர் பிரிவுகளில் பூரணமாக மக்களை குடியேற இராணுவம், மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் யாழ். மாவட்ட செயலகம் ஆகியன நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள கட்டுவன் – மயிலிட்டி வீ தியில் ஒரு பகுதியிலும் மற்றும் மாவிட்டபுரம் – வயாவிளான் வீதியில் ஒரு பகுதியிலும் தொடர்ந்தும் இராணுவத்தின் பயன்பாடு உள்ளது. இந்த பகுதியை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு இராணுவம் தடை விதித்திருக்கின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை ஊடறுத்து மாற்று பாதையை மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் மாற்று பாதையாக பயன்படுத்தப்படும் காணிகளுக்குரிய மக்கள் மீள்குடியேற முடியாத நிலை உருவாகியுள்ளது. மாற்றுப்பாதையாகப் பயன்படுத்தப்படும் அக்காணிகளுக்கு சொந்தமான மக்கள் மீள்குடியேறினால் மாற்றுப்பாதை இல்லாத நிலை ஏற்படுகின்றது.

இது தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் கூறுகையில், “மீள்குடியேற்றத்திற்கான காணியில் உள்ள படைமுகாம்களை அகற்றி, அக்காணிகளை மக்களிடம் மீள வழங்கினாலேயே பூரணமான மீள்குடியேற்றம் சாத்தியமாகும். அதற்கான நடவடிக்கையை இராணுவம் விரைவாக எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)