Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாநில சிறப்பு அந்தஸ்து கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்!

In
Updated: 12:22 GMT, Apr 19, 2018 | Published: 12:22 GMT, Apr 19, 2018 |
0 Comments
1121
This post was written by : Ravivarman

ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு மாநில அந்தஸ்துக் கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் காலை 7 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை குறித்த போராட்டம் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்து தெலுங்கானா மாநிலம் உதயமான போது ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மத்திய அரசு ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தர முடியாது. அதற்குப் பதிலாக சிறப்பு நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்தது. இதனை ஏற்று கொள்ளாத ஆந்திர மக்கள் மாநில சிறப்பு அந்தஸ்து கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையிலேயே ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய அரசை கண்டித்தும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இதேவேளை ஆந்திராவின் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாராயணன் கருத்துத் தெரிவிக்கையில், ‘மத்திய அரசில் 4 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து விட்டு தற்போது சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருப்பது போலியானது. மாநில அந்தஸ்து தேவையில்லை. சிறப்பு நிதியே போதும் என்று கூறியவர் இந்த போராட்டத்தை நடத்துகிறார்’ எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg