Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு லண்டனில் ஆரம்பம்!

In
Updated: 13:20 GMT, Apr 19, 2018 | Published: 13:17 GMT, Apr 19, 2018 |
0 Comments
1073
This post was written by : Ravivarman

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு இன்று (வியாழக்கிழமை) லண்டனில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் லண்டனில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் தலைமைத்துவம், இந்த முறை பிரித்தானியாவிற்கு கிடைத்துள்ளது.

சுமார் 54 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இதன் ஆரம்ப நிகழ்வு, பார்க்கிங்ஹாம் மாளிகையில் இன்று ஆரம்பமானதுடன், இதன்போது, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, பிரித்தானிய மாகாராணி எலிசபெத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாடு, ‘பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்னும் தொனிப்பொருளில், நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி லண்டன் சென்றுள்ளதுடன் சர்வதேச விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளர் லியாம் பொக்ஸை, நேற்று லண்டனில் சந்தித்து க் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது பிரித்தானியாவின் முதலீடுகளை கொண்டு இலங்கையின் மின் உற்பத்தித்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும், சகல நாடுகளுடனும் நட்புறவினை கட்டியெழுப்பிய வண்ணம் இலங்கை அரசாங்கம் பின்பற்றிவரும் வெளிநாட்டு கொள்கைகளின் ஊடாகவே நாட்டிற்கு பல வெற்றிகள் கிட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், இதன்மூலமே இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளிலும், சுற்றுலாத்துறையில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg