Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீதொட்டமுல்ல – இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை

In இலங்கை
Updated: 16:22 GMT, Apr 19, 2018 | Published: 16:45 GMT, Apr 19, 2018 |
0 Comments
1045
This post was written by : Ravivarman

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் காணிகளை இழந்தவர்களுக்கு இழப்பீட்டுத்தொகையினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இடர்முகாமைத்துவ அமைச்சில் இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குப்பைமேடு சரிந்து விழுந்ததினால் சுமார் 40 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றில் சில வாகனங்கள் தொடர்பிலான ஆவணங்களைக்கூட சமர்ப்பிக்க முடியாத நிலை உண்டு. இதன் காரணமாக பெரும்பாலானவர்களின் வாழ்க்கைக்கான தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தின் விசேட குழுவின் மூலம் சம்பந்தப்பட்ட தகவல்களை துரிதமாக பெற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்பொழுது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீடுகளை பெற்றுக்கொள்ளாது வீட்டுக்கான நிதியுதவியை பெற்றுக்கொள்வோருக்கு வீட்டுக்கடன் உதவியை வழங்கும்பணியை மே மாதம் வரையில் நீடிக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் இடர்முகாமைத்துவ பிரதி அமைச்சர், இடர்முகாமைத்துவ செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg