Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுப்பணியில் இராணுவம்: தமிழ் இனத்திற்கு இழுக்கு என்கிறார் ஐங்கரநேசன்

In இலங்கை
Updated: 08:53 GMT, Apr 20, 2018 | Published: 08:53 GMT, Apr 20, 2018 |
0 Comments
1094
This post was written by : Risha

படையினரை பொதுப்பணியில் ஈடுபடுத்துவது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்காகவே அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கோண்டாவில் ஸ்ரீ நாராயணா சன சமூகநிலையத்தின் 66ஆவது ஆண்டுவிழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடக்கு மாகாணத்தின் ஆளுநர் றெஜினோல்ட் குரே-ஐ மாநகரசபையின் புதிய முதல்வர் ஆர்னோல்ட் மரியாதையின் நிமித்தமாகச் சந்தித்துள்ளார். அதன்போது, நகரை அழகுபடுத்துவதற்கு இராணுவத்தின் உதவியைப் பெற்றுத்தருவதாகத் தன்னிடம் ஆளுநர் கூறியதாக முதல்வர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாம் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், எமது தேசிய விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடினோமோ, அதே படையினரை பொதுப்பணிகளில் நாம் அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்காகவே அமையும். எனவே, பொதுமக்கள் செய்யவேண்டிய பொதுப்பணிகளில் இராணுவத்தைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இராணுவத்தை பொதுப்பணிகளில் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக எமக்குப் பாதகமானது. இராணுவம் வெளியேறவேண்டும், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்கவேண்டும் என்று நாம் ஒருபுறம் போராடிக்கொண்டு, இன்னொரு புறம் இராணுவத்தைச் சமூகசேவைக்கும் அழைப்பது ஒன்றுக்கொன்று முரணானது.

இதனை அனுமதித்தால் இராணுவம் தமிழ்மக்கள் மீது கரிசனையாக உள்ளது, படையினரும் தமிழ் மக்களும் இரண்டறக் கலந்துவிட்டார்கள் என்று அரசோடு சேர்ந்து நாமும் சர்வதேசத்துக்குச் சொன்னவர்கள் ஆவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg