Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

In
Updated: 09:52 GMT, Apr 20, 2018 | Published: 09:52 GMT, Apr 20, 2018 |
0 Comments
1132
This post was written by : Risha

இந்தியாவின் காஷ்மீரில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய சமாதான கூட்;டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு முன்னால் இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, இந்தியாவில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதேவேளை, குற்றவாளியை தூக்கிலிட்டு சிறுமி ஆஸிபாவிற்கு நீதி வழங்குமாறும் கோரியிருந்தனர்.

மேலும், ‘இந்தியாவிற்கு பெண்களை அனுப்புவதில் எச்சரிக்கையாக இருங்கள்’, ‘பெண்கள் விளையாட்டு பொருளல்ல’, ‘பாதிக்கப்பட்டவர்களை இன்றி குற்றவாளிகளை தண்டியுங்கள்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எட்டு வயது சிறுமியான ஆஸிபா, கடத்திச் செல்லப்பட்டு, ஆலயமொன்றிற்குள் 10 நாட்கள் மயக்க நிலையில் வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg