Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் ஐ.தே.க.யின் தலைமைப் பதவியில் மாற்றத்தினை எதிர்பார்க்கின்றனர்: நவீன்

In இலங்கை
Updated: 11:03 GMT, Apr 21, 2018 | Published: 11:03 GMT, Apr 21, 2018 |
0 Comments
1148
This post was written by : Ravivarman

நாட்டின் அடித்தட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான மாற்றம் ஒன்று கட்சியில் ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளிட்டவர்கள் இருப்பதாகவும் கூறினார்.

அதேநேரம் சிங்கள பௌத்த வாக்குகள் சிதறி உள்ளதாகவும், அந்த சிங்கள பௌத்த வாக்குகளை தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை குறித்த கட்சி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இம்மாதம் 30ஆம் திகதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg