Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் ரசாயனத் தாக்குதல்: மாதிரிகளை பகுப்பாய்வுக்கு அனுப்ப நடவடிக்கை

In உலகம்
Updated: 03:37 GMT, Apr 22, 2018 | Published: 03:37 GMT, Apr 22, 2018 |
0 Comments
1193
This post was written by : Suganthini

சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதல் தொடர்பாக ஆய்வு நடத்திய சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிபுணர் குழுவினர், மாதிரிகளையும் பிற தடயப்பொருட்களையும் மீட்டுள்ள நிலையில், அவற்றை பகுப்பாய்வுக்காக நெதர்லாந்தின் ரிஜ்ஸ்விஜ்க் (Rijswijk) நகரிலுள்ள ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கிழக்கு கௌட்டாவில் நிலைகொண்டிருந்த ஜெய்ஷ் அல் இஸ்லாம் (Jaish al-Islam) போராளிக்குழுவினரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை சிரிய அரசாங்கப் படையினர் அண்மையில் முன்னெடுத்தனர். இந்நிலையில், டவுமா நகரில் ரஷ்யாவின் உதவியுடன் சிரியப் படையினர் இம்மாதம் 7ஆம் திகதி நடத்திய ரசாயனத் தாக்குதலில், 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சர்வதேச சமூகம் குற்றஞ்சாட்டிய நிலையில், டவுமா நகரில் 9 பேரைக் கொண்ட சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிபுணர் குழுவினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதன்போது, மாதிரிகளையும் பிற தடயப்பொருட்களை மீட்டுள்ளதாகவும், அவற்றை பகுப்பாய்வு செய்யவுள்ளதாகவும், அக்குழுவினர் நேற்று (சனிக்கிழமை) கூறியுள்ளனர்.

மேலும், டவுமா நகரில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலைக் கண்டித்திருந்த அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள், அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் தாக்குதலை முன்னெடுத்தது. இதேவேளை, தம்மீதான குற்றச்சாட்டை  சிரியாவும், ரஷ்யாவும் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg