Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தேர்தல் காலத்தில் முடிவெடுக்கப்படும்: தம்பித்துரை

In இந்தியா
Updated: 09:05 GMT, Apr 23, 2018 | Published: 09:05 GMT, Apr 23, 2018 |
0 Comments
1055
This post was written by : Kemasiya

பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவுசெய்யப்படும் என்று, அ.தி.மு.க. நடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை தெரிவித்தார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமையும் என்ற பாணியில், பத்திரிகை ஒன்றில் அ.தி.மு.க.வினர் வெளியிட்ட  கட்டுரை குறித்து, ஊடகவியலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய தம்பித்துரை இவ்வாறு  கூறினார்.

இதேவேளை மேலும் தெரிவித்த அவர், மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியன இணக்கமாக இருந்து வருகிறோமே தவிர, கட்சிகள் இணைவது குறித்து எந்த முடிவும் இல்லை எனக் கூறினார்.

எனினும் கூட்டணி குறித்து ஏதேனும் சிந்திப்பதென்றால், அது தொடர்பில் தேர்தல் காலத்தில் தான் முடிவெடுக்கப்படும் என்றும் தம்பித்துரை தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg