Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களுக்காக சேவையாற்றுவதே எனது கடமை: ஏறாவூர் நகர சபையின் உப தலைவர்

In இலங்கை
Updated: 10:21 GMT, Apr 23, 2018 | Published: 10:21 GMT, Apr 23, 2018 |
0 Comments
1076
This post was written by : Yuganthini

என்னை தெரிவு செய்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது எனது கடமை. அதனை நான் பதவியிலுள்ள காலத்திலேயே நிறைவேற்றுவேன் என, ஏறாவூர் நகர சபையின் உப தலைவர் மீராலெப்பை ரெபுபாசம் தெரிவித்துள்ளார்

ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“ஜனாதிபதி எமது பகுதிகளுக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களைச் முன்னெடுக்க தீர்மானித்துள்ளார்.

இதனால் எமது மக்களின் முக்கிய பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுச் சென்று அதனை நிறைவேற்றுவேன். மேலும் எனது செயற்பாட்டுக்கு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் தனது ஆதரவினை வழங்கி வருகின்றார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 உள்ளுராட்சி மன்றங்களில் 6 சபைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் சிறந்த முறையில் செயற்பட்ட காரணத்தினால்தான் நாம் இந்த வெற்றியை அடைய முடிந்து.

இதனை உணர்ந்தமையால் தான்  ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு திடசங்கற்பம் கொண்டுள்ளார்.

இதற்காக எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பிரித்துப் பார்த்து எனது சேவையை ஒரு போதும் தொடர மாட்டேன். எல்லோருக்கும் பயனுள்ள சேவைகளைதான் நான் எதிர்காலத்தில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன்.

ஆகையால் எனது எதிர்கால திட்டங்களுக்கு மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg