Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்வி வீழ்ச்சிக்கு கல்வித் திணைக்களமே பொறுப்பு: ஆசிரியர் சங்க செயலாளர் பொ.உதயரூபன்

In இலங்கை
Updated: 06:20 GMT, Apr 24, 2018 | Published: 06:19 GMT, Apr 24, 2018 |
0 Comments
1175
This post was written by : poovannan

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் கல்வி வீழ்ச்சிக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டங்களின் கல்விநிலை தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில், “சமீபத்தில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதரப் பத்திர பரீட்சையின் முடிவுகளின்படி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் கல்விநிலை பாரிய வீழ்ச்சியடைந்துள்ளமையை அறிய முடிந்துள்ளது. இதற்கு மாகாணக் கல்வித் திணைக்களமே பொறுப்பாகும்.

இலங்கையில் உள்ள 25 கல்வி நிர்வாக மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் 22ஆவது நிலையையும் திருகோணமலை மாவட்டம் 23ஆவது நிலையையும் தேசிய ரீதியில் கிழக்கு மாகாணம் 8ஆம் இடத்தையும் பெற்றுள்ளமைக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகளின் செயற்பாடுகளே காரணமாகும்.

இம்மாவட்டங்களில் அமைந்துள்ள சில கல்வி வலயங்கள் அரசியல் நிரல்களை அமுல்படுத்துவதில் செயற்படுகின்றமையே இக்கல்வியின் வீழ்ச்சிக்கான பிரதான காரணமாகும். கல்வி அபிவிருத்தியில் திட்டமிடல் செயற்திட்டங்கள் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தகுதியான வலயக்கல்விப் பணிப்பாளர்களையும் கல்வி அதிகாரிகளையும் நியமிப்பதற்கு அரசியல்வாதிகள் தடையாக இருப்பதோடு சட்டத்திற்கு முரணான உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள் ஆகியோரை மாகாணக் கல்வித் திணைக்களம் நியமிக்கின்றமையும் காரணமாகும்.

வினைத்திறன்மிக்க கல்வியை வழங்கக்கூடிய பல ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுள்ளமை மற்றும் பொருத்தமற்ற பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளமை ஆகியன நாடாளுமன்ற விவாதங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg