Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரணைதீவை ஏன் விடுவிக்கவில்லை? – வெளிவரும் உண்மைகள்

In இலங்கை
Updated: 06:05 GMT, Apr 24, 2018 | Published: 06:05 GMT, Apr 24, 2018 |
0 Comments
1623
This post was written by : Varshini

கிளிநொச்சி – இரணைதீவை விடுவிப்பதற்கு கடந்த வருடம் அரசாங்க தரப்பில் இணக்கம் தெரிவித்த போதும், பின்னர் பாதுகாப்பு உள்ளிட்ட சில விடயங்களை காரணங்காட்டி இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த் தலைமைகள் போதிய அழுத்தத்தை பிரயோகிக்காமையா இதற்கு காரணம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரணைதீவு பூர்வீக மண்ணை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் ஒரு வருடத்தை பூர்த்திசெய்துள்ள நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இரணைதீவுக்குள் நுழைந்த மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக, எமது ஆதவன் தொலைக்காட்சியின் நிலைவரம் நிகழ்ச்சியில் நேற்று ஆராயப்பட்டது.

இதன்போது, தாம் நம்பியிருந்த அரசியல்வாதிகள் தம்மை கைவிட்டுள்ள நிலையில், தாமே போராடி தமது காணிகளை பெற்றுக்கொள்ளும் முடிவில் மக்கள் உள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஒல்லாந்தரின் காலத்திலேயே அங்குள்ள மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன. கிளிநொச்சியில் மக்கள் வாழக்கூடிய ஒரேயொரு தீவாகவும் இரணைதீவே காணப்படுகிறது. இந்நிலையில், இம்மண்ணை விடுவிக்காத காரணம் புரியாத புதிராக உள்ளதென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

குறித்த மண்ணில் காணப்பட்ட வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் சேதமாக்கப்பட்டு மக்கள் வாழ முடியாத வகையில்  தற்போது இரணைதீவு காட்சியளிக்கின்றது. எனினும், எவ்வாறான சிரமங்களையும் தாங்கிக்கொண்டு தமது நிலத்தை மீட்கும் வைராக்கியத்துடன் அங்கு சுமார் 100 பேர் வரை தங்கியிருந்து போராடுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இரணைதீவு கடற்கரையிலிருந்து சுமார் 50 படகுகளில் 360 பேர் நேற்று இரணைதீவுக்குச் சென்றனர். குறித்த பகுதி கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நேற்றைய தினம் மக்களின் வருகைக்கு கடற்படை எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து தமது மண்ணை கட்டித்தழுவி, நிலத்தில் புரண்டு, கண்ணீர் மல்க அம்மக்கள் பிரார்த்தனை செய்து வருவதோடு, தமது காணியை விடுவித்துக்கொள்ளும் நம்பிக்கையில் போராடி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg