Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தண்ணீரின்றி தவிக்கும் தர்மபுரி : மக்கள் கவலை

In இந்தியா
Updated: 03:57 GMT, Apr 25, 2018 | Published: 03:57 GMT, Apr 25, 2018 |
0 Comments
1058
This post was written by : Kemasiya

நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுவரும் இந்தியாவின் தர்மபுரி மாவட்ட மக்கள், அண்மைக்காலமாக நிலவிவரும் வெப்பம் காரணமாக பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாக பொடராங்காடு மாலைப்பகுதியில் வசிக்கும் மக்கள், கோடை காலத்தின் ஆரம்பத்திலேயே வெப்பத்தின் கொடூரத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

இக்கிராமத்தில் பல சந்ததிகளை கடந்து வாழ்ந்துவரும் இம்மக்கள், காலம் முழுதும் தண்ணீரின்றி தவிப்பதாக இந்திய ஊடகமொன்றிடம் கவலை வெளியிட்டுள்ளனர். இவர்கள் தமது கிராமத்தில் உள்ள குட்டைகளில் தான் தண்ணீரை பெற்றுக்கொள்கிறார்கள்.

எனினும் கோடை காலங்களில் குட்டைகள் வற்றிப்போகும் போது, குடிநீருக்காக சுமார் 3கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று தண்ணீர் பெற்றுவருகின்றனர் குறித்த கிராம மக்கள்.

அதேபோன்று இக்கிராமத்தில், போக்குவரத்திற்கு சீரான பாதை மற்றும் வாகன வசதிகள் இன்றி மாணவர்களின் கல்வி நிலையும் பின்தங்கியே காணப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிறுவனொருவன் இந்திய ஊடகமொன்றிடம் கூறுகையில்,

“குடி தண்ணீருக்காக நீண்ட தூரம் பயணிக்கும் நாம் அதன் பின்னர் பாடசாலைக்கு சென்று கல்வி கற்க முடியவில்லை.

தண்ணீரின்றி வாழ முடியாது. அதேபோன்று வீதிகள் சீரின்றி காணப்படுவதால் போக்குவரத்தில் பெரும் இன்னலை எதர்கொள்கிறோம்.

பாடசாலைக்காக நான்கு கிலோ மீட்டர் தூரம் பயணிக்கின்றோம். பாடசாலைக்கு சென்றுதிரும்பும்போது மலையேறுவது மிகக் கடினம். வீடு செல்லமுன்னர் களைத்து போய்விடுவதால் கல்வியில் அக்கறையெடுக்க முடிவதில்லை.

எமது கிராமத்திற்கு வீதி மற்றும் தண்ணீர் ஆகியவற்றுக்கான வசதியை அதிகாரிகள் உடனடியாக முன்னெடுத்து தரவேண்டும்” என குறித்த சிறுவன் கோரியிருந்தான்.

அதே போன்று அப்பகுதியில் வசிக்கும் மக்களும், தமது அத்தியாவசியமாக திகழும் தண்ணீர் மற்றும் போக்குவரத்தை சீர்செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரட்சியென்று வரும்வேளையில் இந்தியாவின் பல பகுதி மக்கள் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் போவது காலம்தோறும் நீடிக்கும் செயலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg