Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்

In இலங்கை
Updated: 15:18 GMT, Apr 26, 2018 | Published: 15:18 GMT, Apr 26, 2018 |
0 Comments
1093
This post was written by : Anojkiyan

வெறுமனே ஆனந்த சுதாகரனை மட்டுமல்லாமல் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தில், இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சில தினங்களுக்கு முன்னர் நான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். அப்போது சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் எந்தவிதமான மற்றமும் இல்லை. ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் தடையாக உள்ள சில காரணங்களை கூறியிருந்தார். அந்த காரணங்கள் ஏற்றுக் கொள்ளகூடியவையாக இல்லை.

ஆனாலும் இந்த அரசாங்கத்தை கொண்டே அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். வெறுமனே ஆனந்த சுதாகரனை மட்டுமல்லாமல் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கணவனும் மனைவியும் தடுத்துவைக்கப்பட்ட மனை 17 வருடங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

கணவன் தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கின்றார். இவர்களுடைய பிள்ளைகள் 17 வருடங்களாக பெற்றோருடன் வாழவில்லை. இப்படி ஒவ்வொரு அரசியல் கைதிக்கு பின்னாலும் ஒவ்வொரு துயரம் நிறைந்த கதை உள்ளது. இதேபோல் அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் சில விடயங்களை விரைவில் பேசவுள்ளதாக அறிந்து கொண்டோம். அதில் அரசியல் கைதிகளின் விடுதலையும் உள்ளடக்கம். ஆகவே தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்பதன் ஊடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg