Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நைஜீரிய மசூதியில் குண்டுவெடிப்பு: 27 பேர் உயிரிழப்பு

In
Updated: 08:08 GMT, May 2, 2018 | Published: 08:08 GMT, May 2, 2018 |
0 Comments
1058
This post was written by : Risha

வடகிழக்கு நைஜீரியாவின் முபி நகரிலுள்ள மசூதியொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மசூதிக்குள்ளும், மசூதி வளாகத்திலும் நேற்று (செவ்வாய்க்கிழமை) இருவேறு குண்டு வெடிப்புகள் அரங்கேற்றப்பட்டு இவ்வாறு உயிர்சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் 56 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் முபி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தலைமை மருத்துவ பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை குண்டுதாரி ஒருவரினால் மசூதிக்குள் முதல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் பதறியடுத்து ஓடியபோது மசூதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் வெடிப்பு சாதனமொன்றை வெடிக்கவைத்து இரண்டாவது தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொலு அமைப்பும் பொறுப்பேற்காத போதிலும், இதற்கு முன்னர் முபி நகரில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பொகோ ஹராம் குழுக்களே உரிமை கோரியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில், பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வன்முறை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாக தொடர்ந்துவரும் கிளர்ச்சியில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg