Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஹரியின் திருமண நாளில் டயானாவை கௌரப்படுத்த தீர்மானம்

In
Updated: 05:36 GMT, May 6, 2018 | Published: 05:36 GMT, May 6, 2018 |
0 Comments
1152
This post was written by : Suganthini

வேல்ஸ் இளவரசியான மறைந்த டயானாவை, அவரது புதல்வரும் இளவரசரருமான ஹரியும் ஹரியின் வருங்கால மனைவியான மேகன் மாக்கிலும் தமது திருமண நாளில் கௌரவப்படுத்த எண்ணியுள்ளனர்.

பிரித்தானிய 2ஆம் எலிஸபெத் மகாராணியின் பேரப்பிள்ளையான இளவரசர் ஹரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான மேகன் மாக்கிலுக்கும்; எதிர்வரும் 19ஆம் திகதி வின்ஸ்டர் கோட்டையிலுள்ள சென். ஜோர்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் திருமணத்துக்கு இன்னும் 13 நாட்களேயுள்ள நிலையில், திருமண ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமது திருமண நாளில் தனது மறைந்த தாயான வேல்ஸ் இளவரசி டயானாவை ஹரியும் மேகன் மாக்கிலும் நினைவுகூர்ந்து கௌரவப்படுத்த எண்ணியுள்ளதுடன், இதில் இளவரசி டயானாவின் 3 சகோதரர்களும் கலந்துகொள்வார்களெனவும், கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

வேல்ஸ் இளவரசியான டயானா தனது 36ஆவது வயதில், 1997ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி பிரான்ஸில் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg