Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நைஜீரியாவில் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 07:40 GMT, May 7, 2018 | Published: 07:40 GMT, May 7, 2018 |
0 Comments
1205
This post was written by : Johnson paiva

வடமேற்கு நைஜீரியா, கடுனா மாநிலத்தில் ஆயுதக்குழு ஒன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடுனா, பிரினின் க்வாரி பிரதேசத்தில் காணப்படும் க்வாஸ்கா எனும் கிராமத்தில் சனிக்கிழமை ஆயுதம் தரித்த குழு ஒன்று தாக்குதல் நடத்தியதாகவும் அப்போது குறைந்தபட்சம் 45 பேர் வரைக் கொல்லப்பட்டுள்ளார்கள் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டு ஊடகமொன்றின் தகவலின்படி ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குழந்தைகளும் கூடக் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

இந்நிலையில் குறித்த அந்தப்பிரதேசத்தில் கால்நடைகள் மற்றும் சொத்துக்களைத் திருடும் குழுவொன்று நடமாடி வந்ததாகவும் அவர்கள் ஆயுதம் வைத்திருந்ததாகவும் அவர்கள் இந்தத் தாக்குதலினை நடத்தியிருப்பார்கள் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில் அந்தப்பகுதி முழுவதும் நைஜீரிய இராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆளுநர் Nasir Ahmad El-Rufai யின் செய்தித்தொடர்பாளர் Samuel Aruwan தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)