Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானின் அணு ஒப்பந்தத்தைக் கைவிடும் எண்ணம் தமக்கில்லை –ஜோன்ஸன்

In
Updated: 04:46 GMT, May 10, 2018 | Published: 04:46 GMT, May 10, 2018 |
0 Comments
1127
This post was written by : Suganthini

கடந்த 2015ஆம் ஆண்டில் ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட உடன்படிக்கையைக் கைவிடும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லையென, பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளார் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தித்திட்ட உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) கலந்துரையாடியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்தபோது, ‘ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதற்கான எந்தவித எண்ணமும் பிரித்தானியாவுக்கு இல்லையென்பதுடன், ஏனைய நாடுகளுடன் இணைந்து இந்த உடன்படிக்கையை பேணுவதற்கான முயற்சியில் நாம் ஈடுபடுவோம்’ என்றார்.

மேலும், அணுசக்தித்திட்ட உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பின்னர், ஈரானுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனக் கூறியுள்ள அவர், இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு பிரித்தானியா சவாலாக விளங்குமெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரானில் வர்த்தக நலன்களைப் பாதுகாப்பதற்காக பிரித்தானியா அனைத்து முயற்சிகளையும் செய்யுமெனவும், அவர் கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் ஈரானுக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், பிரித்தானியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குமிடையில் அணுசக்தித்திட்ட உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் செய்துகொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையைக் கைவிடுவதாக அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். எனினும், இந்த உடன்படிக்கையை தக்கவைத்துக்கொள்ளுமாறு பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு வலியுறுத்தியபோதும், அம்முயற்சி தோல்விக்குள்ளாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg