Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

NAFTA பேச்சுவார்த்தைகள் முடிவுக்குவரும் சாத்தியப்பாடுகள் அரிது!

In கனடா
Updated: 08:27 GMT, May 11, 2018 | Published: 08:27 GMT, May 11, 2018 |
0 Comments
1028
This post was written by : Anojkiyan

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வரும் சாத்தியப்பாடுகள் அரிதாகவே காணப்படுவதாக கூறப்படுகின்றது.

குறித்த உடன்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் வோஷிங்டனில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், இதற்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையே, வாகன உற்பத்தித் துறையில் காணப்படும் இடைவெளிகள் மிக பெரிதாக நீண்டு செலவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த வாரத்தில் மெக்சிக்கோவினால் வாகன உதிரிப்பாக உற்பத்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவானது, அமெரிக்காவின் நோக்கங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாகவும், அவர்களின் நிலைப்பாட்டிற்கு வெகு தொலைவில் உள்ளதாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)