Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட. மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு

In இலங்கை
Updated: 07:05 GMT, May 14, 2018 | Published: 04:50 GMT, May 14, 2018 |
0 Comments
1085
This post was written by : poovannan

வட. மாகாண அரச வைத்தியர்கள் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வட. மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், குறித்த கொடுப்பனவுகளை வழங்க கோரி இன்று (திங்கட்கிழமை) இப்பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வட. மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு கோரிக்கைக்கு அமைய, வட. மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தூர இடங்களிலிருந்து பல்வேறு மருத்துவ தேவைகளுக்காக மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலைக்குச் சென்ற வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட பலர் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)