Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்புக்கொள்கை மீதான செல்வாக்கை பிரித்தானியா இழக்குமென எச்சரிக்கை

In
Updated: 05:31 GMT, May 14, 2018 | Published: 05:31 GMT, May 14, 2018 |
0 Comments
1056
This post was written by : Suganthini

பிரெக்சிற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுப் பாதுகாப்புக்கொள்கை மீதான செல்வாக்கை பிரித்தானியா இழக்கக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், இது தொடர்பாக எதிர்கால ஒத்துழைப்புக்கான யோசனையை பிரித்தானியா அரசாங்கம் முன்வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரெக்சிற் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ‘பிரித்;தானியாவின் வெளிவிவகாரக்கொள்கை முன்னுரிமைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கணிசமான பங்களிப்பைச் செய்துவருகின்றன. இந்நிலையில் பிரெக்சிற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக்கொள்கையை பிரித்தானியா கடைப்பிடிக்க முடியுமெனும் போதிலும், பாதுகாப்புக்கொள்கை மீதான திட்டச் செயற்பாடுகள், தலைமைத்துவம், மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றில் பிரித்தானியா செல்வாக்கை பெற்றுக்கொள்ள முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)