Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம் திறப்பு : 16 பேர் சுட்டுக்கொலை

In உலகம்
Updated: 11:26 GMT, May 14, 2018 | Published: 11:26 GMT, May 14, 2018 |
0 Comments
1507
This post was written by : Suganthini

ஜெருசலேமில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலஸ்தீனியர்கள் 16 பேர் இஸ்ரேலிய படையினரால்; சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸா எல்லையில் பலஸ்தீனியர்கள் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதே, இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

புனித நகரான ஜெருசலேமை இஸ்ரேல் தமது தலைநகரென்றும் கிழக்கு ஜெருசலேம் தமது தலைநகரென்றும் பலஸ்தீனமும் கூறிவந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த டிசெம்ரில் ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்தார்.

இதற்கு பலஸ்தீனியர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில், ட்ரம்ப்பின் ஒருதலைப்பட்சமான இந்த அறிவிப்பினால் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்குமிடையிலான முறுகல் விரிவடைந்துள்ளது.

இந்நிலையில், ரெல் அவ்விவ்வில் இயங்கிவந்த இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை, பலஸ்தீனியர்களின் கடும் கண்டனத்துக்கு மத்தியில் ஜெருசலேமில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதல்வியான இவங்;காவும் அவரது கணவரான ஜெராட் குஷ்னரும் திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)