Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹரி-மார்க்கல் திருமணத்தை கொண்டாடிய லொஸ் ஏஞ்சல்ஸ் பாடசாலை மாணவர்கள்

In
Updated: 05:38 GMT, May 16, 2018 | Published: 05:38 GMT, May 16, 2018 |
0 Comments
1037
This post was written by : Risha

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணத்தை, லொஸ் ஏஞ்சல்ஸ் பாடசாலை மாணவர்கள் கொண்டாடியுள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் பாடசாலையின் பழைய மாணவியான மேகன் மார்க்கல், பிரித்தானிய இளவரசரை கரம்பிடிக்கவுள்ள நிலையில், அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலையின் புற்தரை முற்றத்தில் கூடிய இடைநிலை மற்றும் உயர்நிலை பாடசாலை மாணவிகள் அமெரிக்க- பிரித்தானிய கொடிகளை அசைத்தவாறு ஆடி-பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், இளவரசர் ஹரியை கரம்பிடிக்கவுள்ள மார்க்கல் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்நாளை கழிக்க இதயபூர்வமான வாழ்த்துக்களை மாணவர்கள் ஆரவாரத்துடன் தெரிவித்தனர்.

ஒரு ஆர்வலராக, மனிதாபிமான செயற்பாட்டாளராக மற்றும் ஒரு பெண்ணியவாதியாக தன்னை அடையாளப்படுத்திவரும் மார்க்கலினால் தாம் ஈர்க்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குறிப்பிட்டனர்.

வேறொரு நாட்டை சேர்ந்தவர், அதுவும் அரச குடும்பத்தை சாராத ஒருவர் பிரித்தானிய இளவரசரை திருமணம் செய்வது என்பது மிகப்பெரிய விடயம் என மார்க்கலை எண்ணி மாணவர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர்.

ஒரு சாதாரண பெண்ணாக இருந்து கடின முயற்சிகளினால் முன்னேற்றமடைந்து, தற்போது பிரித்தானிய இளவரசரை கரம்பிடிக்கும் அளவிற்கு மேகன் மார்க்கல் வளர்ந்துள்ளார். அவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் தன்னை ஈர்த்துள்ளதாகவும் மாணவி ஒருவர் குறிப்பிட்டார்.

ஹரி-மார்க்கல் திருமணம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அவர்களது திருமணத்தை உலகமே கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)