Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறந்த காற்பந்து வீரருக்கான விருதைப் பெற்றார் நெய்மர்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:11 GMT, May 16, 2018 | Published: 06:11 GMT, May 16, 2018 |
0 Comments
1056
This post was written by : Puvanes

உலகின் தலைசிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவரான பிரேசிலின் நெய்மர் கடந்த ஆண்டின் தலைசிறந்த காற்பந்து வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நட்சத்திர கால்பந்து வீரராக வலம் வரும் நெய்மர் பல்வேறு சாதனைகளின் மூலம் காற்பந்து உலகில் தனக்கென தனி முத்திரையினைப் படைத்துள்ளார்.

அண்மைக்காலமாக காயத்தினால் பாதிக்கப்பட்ட அவர் தொடர் ஓய்வில் இருந்து வந்தார். தற்போதைய நிலையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள நெய்மர் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் பாரிஸில் நடந்த விழா ஒன்றில் கடந்த ஆண்டின் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரருக்கான விருது நெய்மருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விருதின் பின்னர் நெய்மர் கருத்து தெரிவிக்கும் போது, “பிரேசில் அணியை விட்டு விலகும் எண்ணம் எதுவும் இல்லை. தொடர்ந்தும் அந்த அணிக்கு எனது பங்களிப்பினைச் செய்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளதோடு, உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்ற ஆர்வமாக உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த உலகக் கிண்ணத் தொடரில் 20 லீக் போட்டிகளில் விளையாடிய நெய்மர் 19 கோல்களை அடித்தார் என்பதும், உலகிலேயே அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரராகவும் இவர் காணப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)