Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவால்களுக்கு மத்தியில் பொருளாதார முன்னேற்றம்! – பிரதமர் ரணில்

In இலங்கை
Updated: 07:02 GMT, May 16, 2018 | Published: 07:02 GMT, May 16, 2018 |
0 Comments
1063
This post was written by : Varshini

நாடு கடன் சுமையை எதிர்கொண்டுள்ள போதும், அந்த சவாலை எதிர்கொண்டு பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அதனை சக்திமிக்கதாக மாற்றும் சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை நவீன மயமாக்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”நாட்டின் கிராமிய அபிவிருத்தி இன்று பல பிரச்சினைகளை சந்தித்துள்ளது. கிராமிய பொருளாதாரத்திலிருந்து இளைஞர்கள் பின்வாங்குகின்றனர். அதனால் கிராமிய அபிவிருத்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டே கிராமிய அபிவிருத்தியை நவீனமயமாக்கும் உலகலாவிய செயற்றிட்டத்தில் இலங்கையும் இணைகின்றது.

அமெரிக்கா, சீனா, தாய்லாந்து ஆகிய எந்த நாடாக இருந்தாலும் இன்று கிராமிய பொருளாதாரத்தை நவீனமயமாக்கி செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. அதன்மூலம் கிராமிய பொருளாதாரம் முன்னேற்றம் காண்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் அபிவிருத்தியடைகின்றது. எனினும், தெற்காசியாவில் இந்த நிலை இன்னும் ஏற்படவில்லை.

இந்நிலையில், எமது நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்கதாக மாற்றி, மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் மார்க்கங்களில் ஒன்றாக நாம் கிராமிய பொருளாதாரத்தை நோக்கின்றோம். அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கவே இன்று கிராமிய பொருளாதாரத்தை நவீன மயமாக்கும் வேலைத்திட்டத்தில் இணைகின்றோம். இதன்மூலம் நாம் எமது பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளலாம்.

இன்று எமது நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகளும், ஏற்றுமதிகளும் அதிகரித்த ஆண்டாக 2017 காணப்படுகிறது. இதனைக் கூறிவிட்டு நாம் செயற்படாமல் இருக்கப் போவதில்லை. இவற்றுடன் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கின்றோம்.

2015ஆம் ஆண்டு நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது கடன்களுக்கான வட்டியை செலுத்தவும் பணம் இருக்கவில்லை. இன்று அவற்றை செலுத்தும் அளவிற்கு பலமடைந்துள்ளோம். எதிர்காலத்தில் கடன் தொகையை அதிகரித்து லாபத்தை பெருக்கவே நாம் எதிர்பார்த்துள்ளோம்.

வருடமொன்றிற்கு 2000 பில்லியன் டொலர் கடன்செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதனை எதிர்கொண்டே நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றோம்.

நாட்டின் ஏற்றுமதியும் வெளிநாட்டு முதலீடும் அதிகரிக்கும் போது வேலைவாய்ப்பும் அதிகரிக்கின்றது. கிராமிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த காரணத்தினாலேயே அங்குள்ள இளைஞர் யுவதிகள் நகரை நோக்கி படையெடுக்கின்றனர். ஆகவே நாம் கிராமிய பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும்.

அத்தோடு, காணி உறுதியற்றவற்றவர்களுக்கு உறுதிகளை வழங்குவோம். அப்போது காணி உறுதியுடன் வருவாயும் அந்த மக்களுக்கு கிடைக்கும்.

கடந்த வருடம் வெள்ளம், வறட்சி என எமது நாடு பாரிய இழப்பை சந்தித்தது. எனினும், நாம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் பேணினோம். பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசென்றோம். அதனை மேலும் பலமடையச் செய்வதற்கான நடவடிக்கைகளையே தற்போது முன்னெடுக்கின்றோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)