Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் போட்டி தேவையில்லை: தவராசா

In இலங்கை
Updated: 08:01 GMT, May 16, 2018 | Published: 08:01 GMT, May 16, 2018 |
0 Comments
1087
This post was written by : Ravivarman

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மூன்றாம் தரப்பாக போட்டி போட விரும்பவில்லை என கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.

கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதேச சபையின் முதல் அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை கரைத்துறைப்பற்று பிரதேச சபையே செய்வதாக தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து வட.மாகாணசபை முதலமைச்சருக்கும், வட.மகாணசபைக்கும் கடிதம் மூலம் அறிவித்திருந்தோம். ஆனால் இதுவரையில் எமக்கான பதில் கிடைக்கவில்லை.

இருப்பினும் பத்திரிகை வாயிலாக வட.மாகாணசபை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தவுள்ளதாக அறிந்தோம். எமது பிரதேசசபை எல்லைக்குட்பட்ட குறித்த நிகழ்வினை நாம் நடத்தாமல்போவது குறித்து மிகுந்த வேதனையடைகின்றோம். இது தொடர்பாக எமது பிரதேச சபை உறுப்பினர்களும் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

எனினும் மூன்றாம் தரப்பாக நாம் போட்டியிட்டுக் குறித்த நினைவேந்தல் நிகழ்வினை நடத்த விரும்பவில்லை. எனவே கனத்த இதயத்துடன் இந்த முயற்சியினைக் கைவிடுகின்றோம்.

எனவே உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட வேண்டிய இந்நிகழ்வில் நாம் எனது பூரண ஒத்துழைப்பினை வழங்குவதுடன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்நிகழ்வினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)