Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் இந்தியாவின் தலைமைத்துவத்தில் ஐ.சி.சி. நிர்வாகம்

In கிாிக்கட்
Updated: 09:25 GMT, May 16, 2018 | Published: 09:25 GMT, May 16, 2018 |
0 Comments
1038
This post was written by : Litharsan

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவராக இந்தியாவின் பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவரான ஷசாங் மனோகர் இரண்டாவது முறையாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சீர்த்திருத்தங்களை முன்னின்று நடத்தியவர் என்றவகையில் அவரை, சபை முன்மொழிந்ததில் போட்டியின்றி தெரிவாகியுள்ளார்.

இந்த பதவிக்கான தெரிவு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் தற்போது பதவியில் இருந்த மனோகரே இரண்டாவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் 104 நாடுகளுக்கு ரி-20 அந்தஸ்து வழங்கியது நினைவிருக்கலாம். அதே நேரத்தில் அடுத்த வருடத்திலிருந்து டெஸ்ட் சம்பியன்ஷிப்பை நடத்துவதில் ஐ.சி.சி முனைப்புக் காட்டி வருவது டெஸ்ட் போட்டிகள் இன்னும் கொஞ்சம் காலம் வாழ வழிவகுக்கும்.

ஒவ்வொரு நாட்டிலும் ஐ.பி.எல் போன்ற ஃபிரான்சைசி கிரிக்கெட் பரவலாகிவரும் வேளையில் அதனைக் கட்டுப்படுத்தி சர்வதேச அளவில் மீண்டும் கிரிக்கெட்டை பரவலாக்க வேண்டும் என்பதே மனோகரின் குறிக்கோளாக இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)