Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயிலில் பெண்களுக்கு புதிய நடைமுறை

In இந்தியா
Updated: 11:11 GMT, May 16, 2018 | Published: 09:57 GMT, May 16, 2018 |
0 Comments
1090
This post was written by : Jeyachandran Vithushan

இந்தியாவில் ரயில் பயணத்தின் போது பெண்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதால் இந்திய புகையிரத திணைக்களம் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இரவு நேர ரயில் பயணங்களின் போது புகையிரத பேட்டி ஒன்றில் 2 பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்கள் பயணம் செய்யும் புகையிரத பெட்டிகளை இலகுவில் கண்டுகொள்ளக்கூடிய விதத்தில் பெட்டிகளுக்கு புதிய வர்ணம் பூசவுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தவுள்ளதாகவும் , அவசர காலங்களில் பெண்கள் உதவியை பெற்றுக்கொள்வதற்காக ரயில் பெட்டிகளில் (பானிக் பட்டன்) ஒன்று வைக்கப்பட உள்ளது.

மேலும், பெண்கள் தங்களுக்கு உதவு தேவைப்படும் போது அந்த பட்டனை அழுத்தினால், ரயில் பெட்டியில் இருக்கும் ஊழியருக்கு தகவல் சேரும் என்றும் இதன் மூலம் எளிதாக உதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைமை வடக்கு கிழக்கு ரயில் போக்குவரத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg