Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இடம்பெயர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் சத்தியக் கடதாசி மூலம் மேன்முறையீடு செய்யலாம் – கிழக்கு ஆளுநர்

In இலங்கை
Updated: 15:39 GMT, May 16, 2018 | Published: 15:39 GMT, May 16, 2018 |
0 Comments
1091
This post was written by : Litharsan

2006 ஆம் ஆண்டு போரினால் இடம்பெயர்ந்த தொண்டராசிரியர்கள், சத்தியக்கடதாசி மூலம் இடப்பெயர்வை உறுதிப்படுத்தி மேன்முறையீடு செய்யலாம் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கு மாகாண ஆளுநர், முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் இணைந்து தொண்டர் ஆசிரியர்கயைச் சந்தித்தனர். இதன்போதே குறித்த தொண்டராசிரியர்களுக்கு ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று முடிந்திருந்தன. இதனையடுத்து தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆட்சேபனைகள், முறைப்பாடுகள் என்பவற்றை 17ம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

2006 இல் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகள் காரணமாக பல தொண்டர் ஆசிரியர்கள் இடம்பெயர்ந்திருந்தமையால் 2006 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரையான காலப்பகுதிக்குரிய ஆவணங்களைத் தங்களால் சமர்ப்பிக்க முடியாமல் இருந்ததாகவும் இதனடிப்படையில் தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இதன் போது தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே சுறித்த விடயத்தைத் தெரியப்படுத்துவதான ஒரு சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்குமாறும், அந்த சத்தியக் கடதாசியின் கீழ்ப்பகுதியில் குறித்த பகுதி கிராம சேவகர் குறித்த காலப்பகுதியில் அப்பிரதேசத்தில் இடப்பெயர்வு நடைபெற்றதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையாகவிருந்த மேன்முறையீடு செய்வதற்கான இறுதித் திகதியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)